~வாழ்க்கை~
நடைபயணமும் வாழ்கையும் ஒன்றுதான்
இரண்டிலும் நம்மை வழிநடத்தி செல்வது நம் கால்கள் மட்டுமே !
~மழை~
மழை நீர் பட்டு மண் மணக்க, மனம் முழுவதும் தூவானம்...
~வாழ்க்கை~
வாழ்க்கை பாதையில் சில கற்கள், இடறல்களாய் சில சுமைதாங்கியாய்
சில ஏணிபடிகளாய் , சில மயில்கல்லாய்...
~நிதர்சனம்~
வானத்து நட்சத்திரங்கள் தான் விழுகின்றன என நினைத்தேன்
மின்விசிறியில் பட்டு மின்மினிகள் அல்லவா விழுந்தன !
~நதி~
மலை அன்னையின் முதல் குழந்தை
அழவில்லை ஆரவாரிக்கிறது...
~இளம் விதவை~
~இளம் விதவை~
முகவரியை தொலைத்தவளாய் முதல் வரியே முடிவுரையாய்...
english lady, english translation plz... :P
ReplyDeletehmm...not all poems can be translated to another language without sacrificing a bit of its poetic touch....lemme try!
ReplyDeleteJency please, Unnoda kavithai thiran aangilathil mattum irukattum. Ennaku therinja konja tamiz-um maranthu poyidum pola irukku!!!!
ReplyDeleteun tamil pathi enakku theriyadha??? mazhai nu sollama malai-nu solravan nee...
ReplyDelete