Friday, December 17, 2010

Saw a kid the other day in the market and was captivated by her innocent beauty...A song dedicated to my 'chellam' :


யார் சொன்னார்கள் பெற்றால் தான் தெரியும் பிள்ளை பாசமென்பது
தனக்குள் அன்பை வைத்திருக்கும் எந்த ஒரு உயிர்க்கும் தெரியும்
உன்னை நேசிப்பது எப்படி என்று...
சுருண்ட உன் கூந்தலிலும் உன் தாயின் கை பிடித்து நீ நடக்கும் அழகிலும்
என்னுள் இருக்கும் என நான் அறியாத தாய்மையை சுண்டி இழுக்கிறதடி என் கண்ணே!
With the onslaught of Winter, my mood swings are pretty high.....this poem is written on a day when I was feeling really low...so didn't bother translating it :(

தான் விதைத்ததை தானே அறுப்பது நியதி
அவ்வாறு இருப்பின் உங்கள் வெறுப்புகளை என் மீது திணிப்பது எப்படி நியாயம் ஆகும் ?
நான் அதை சிரித்து மறைத்தால் நடிக்கிறேன் என்கிறீர்கள்
அழுதாலோ நீலிக்கு கண்ணீர் நெற்றியில் என்பீர்கள்
உங்களை நான் மன்னிக்கிறேன்...
மன்னிப்பது மற்றவர் தவறை மறக்க செய்யும் என்பார்கள்
மறந்துதான் போயிற்று.....மற்றவர்க்கு!