பல நாள் ஆயிற்று தமிழில் எழுதி...கவிதைகள் காய்ந்து போயின இந்த இயந்திர வாழ்வின் சுடும் வெயிலில்...கணிப்பொறியில் தொலைந்தன என் கதை சொல்லும் நேரங்கள்...சோம்பலை களைந்து எழுதுகிறேன்...
நேற்று மாலை கடற்கரையில்...
சற்று மாறுதலாக இருக்கட்டுமே ஞாயிற்று கிழமைகள் என்று, கடற்கரைக்கு போகலாமா என்று கேட்டேன் தங்கையிடம். அவளுக்கு ஒரே சந்தோஷம்....எப்போதும் வெளியே வர மறுக்கும் என் அம்மாவும் கூட ரெடி. அவர்கள் வர சம்மதித்தது எனக்கு ஒரே ஆச்சர்யம்!
மதிய உணவிற்குப்பின் கிளம்பினோம், ஆவடியில் இருந்து ஒரு மணிநேர பயணம்.நான்கரை மணிக்கு அண்ணா சதுக்கம் சென்றடைந்தோம். பேருந்திலிருந்து இறங்கும்போதே நீண்ட நாள் பிரிந்திருந்த நண்பரை சந்திப்பது போல் கடற்காற்று வந்து ஆரத்தழுவி கொண்டது...இயற்கைக்கு தான் எத்தனை அன்பு, தாய்மை, சிநேகம்...
அவள் அன்பில் ஈர்கப்பட்டவர்களாக நடந்து சென்றோம் கடற்கரையில்...வெயிலும் கூட கோபம் குறைந்து மந்தகாசமாய் சிரித்துகொண்டிருன்தது....கொஞ்ச தூரம் நடந்த பின்பு ஜனக்கூட்டம் அதிகமாக இல்லாத இடத்தில நின்று விளையாடுகிறோம் ...அம்மா வழக்கம் போல எங்கள் பைகளை வாங்கி கொண்டு போய் கரையில் உட்கார்ந்து கொள்வாள் என்றெண்ணிய எங்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி...அம்மாவும் சேர்ந்து கொண்டால் எங்களுடன் விளையாட...
அம்மாவுக்கு இயற்கையிலேயே மிகவும் பயந்த சுபாவம். சிறு வயதில் தன் வீடு பக்கத்தில் இருக்கும் வாய்க்காலை கடப்பதே அவளுக்கு முடியாத காரியம், இன்று என்ன ஆனதோ... எங்களுடன் சேர்ந்து கொண்டால், தன் இயல்புகளை மறந்து...
முதலில் பயந்த பூனைக்குட்டி போல் பாதம் வரை வந்து திரும்பி சென்ற அலைகள், சற்று நேரம் கழிந்த பின் தைரியத்தை வளர்த்து கொண்டு மடியில் ஏற முற்படுகின்றன.. பயந்த என் தங்கை திரும்பி செல்லலாமா என கேட்கிறாள்...அவளுக்கு நான் பதில் சொல்லும் முன், என் அம்மா முந்தி கொண்டால்...
அவளுக்கு அலைகளோடு இன்னும் அருகே சென்று விளையாட வேண்டுமாம்..அவள் கைகளை நாங்கள் இருவரும் பிடித்து கொள்ள, அடுத்து வரும் அலைக்குள் அப்படியே உட்கார்ந்து கொள்கிறாள், கடலில் மூழ்கி தன் வருடங்களை தொலைத்து விட்டால் போலும், சின்ன பெண் போல மகிழ்ந்து சிரிக்கிறாள்! அம்மாவின் இந்த மாற்றம் மிக ஆச்சர்யமான ஒன்று...
சற்று முன் கடலோரத்தில் நடந்து வரும்போது... அங்கே சிறு பிள்ளைகளோடு தண்ணீரில் விளையாடும் பெற்றோரை பார்த்தேன்.. நமக்கும் ஒரு குழந்தை இப்போது இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என எண்ணிக்கொண்டேன்...என் கைகளின் பாதுகாப்புக்கிடையே அவளுக்கு/அவனுக்கு கடலோடு விளையாட கற்று கொடுத்திருப்பேன்...
எண்ணங்கள்... அவை சுயநலமற்றவையாய் மிகவும் தூய்மையாய் இருக்கும் போது இறைவன் உடனே கேட்டு பதில் அளிப்பார் போலும், என் தாயை நேற்று குழந்தையாய் மாற செய்தார்! அந்த இனிய மாலையின் சந்தோஷ தருணங்களை அழகு தொகுப்பாக எழுத முயல்கிறேன்....சொற்/ பொருட் தவறுகளை மன்னிக்கவும்!
Looks like you have decided that I should not read your blog :-(
ReplyDelete:( nothing like that sahana...i felt i was not writing in tamil for quite sometime so tried :) i'll post a translation as soon as i found time out of the AM madness :D
ReplyDeleteIts a good read.When I was reading i was able to see your family, people around and beach.
ReplyDelete:) thanks gawaskar! BTW u haven't posted any tamil poems recently...wat happ? busy?
ReplyDeletewow.. Jency, start writing tamil novels. Loved this post.
ReplyDelete@rohini: analum neenga enna romba pugazhreenga :D
ReplyDelete